என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » போயஸ் கார்டன்
நீங்கள் தேடியது "போயஸ் கார்டன்"
வரி பாக்கியை செலுத்திவிட்டால் போயஸ் கார்டன் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற ஆட்சேபம் இல்லை என்று உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. #VedaNilayam #HighCourt
சென்னை:
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த, போயஸ் கார்டன் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. இந்த அரசாணைக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்நிலையில், இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வருமான வரித்துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், 2007ம் ஆண்டு முதலே ஜெயலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை முடக்கி வைத்திருப்பதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
‘ஜெயலலிதா செலுத்த வேண்டிய ரூ.10.13 கோடி சொத்து வரி, 6.62 கோடி வருமான வரி என மொத்தம் ரூ.16.75 கோடி வரி பாக்கிக்காக 2007ம் ஆண்டு முதலே ஜெயலலிதாவுக்கு சொந்தமான போயஸ் கார்டன் இல்லம், ஐதராபாத் வீடு, சென்னை அண்ணா மேம்பாலம் அருகே உள்ள கடை உள்ளிட்ட 4 சொத்துக்களை முடக்கி வைத்துள்ளோம். இந்த வரி பாக்கியை செலுத்திவிட்டால் போயஸ் கார்டன் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற ஆட்சேபம் எதுவும் இல்லை’ என வருமான வரித்துறை தனது மனுவில் கூறியுள்ளது. #VedaNilayam #HighCourt
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த, போயஸ் கார்டன் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. இந்த அரசாணைக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், ஜெயலலிதா செலுத்த வேண்டிய வருமான வரி ஏதும் நிலுவையில் உள்ளதா? போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையத்தை ஜெயலலிதாவின் நினைவில்லமாக மாற்ற வருமான வரித்துறைக்கு ஆட்சேபனை ஏதும் உள்ளதா? என்பது குறித்து, ஜனவரி 24ம் தேதிக்குள் வருமான வரித்துறை பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
‘ஜெயலலிதா செலுத்த வேண்டிய ரூ.10.13 கோடி சொத்து வரி, 6.62 கோடி வருமான வரி என மொத்தம் ரூ.16.75 கோடி வரி பாக்கிக்காக 2007ம் ஆண்டு முதலே ஜெயலலிதாவுக்கு சொந்தமான போயஸ் கார்டன் இல்லம், ஐதராபாத் வீடு, சென்னை அண்ணா மேம்பாலம் அருகே உள்ள கடை உள்ளிட்ட 4 சொத்துக்களை முடக்கி வைத்துள்ளோம். இந்த வரி பாக்கியை செலுத்திவிட்டால் போயஸ் கார்டன் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற ஆட்சேபம் எதுவும் இல்லை’ என வருமான வரித்துறை தனது மனுவில் கூறியுள்ளது. #VedaNilayam #HighCourt
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வீட்டை நினைவு இல்லமாக மாற்றம் செய்வது குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது. #Jayalalitha #JayalalithaHouse #PoesGarden #TNGovernment
சென்னை:
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ‘வேதா நிலையம்’ இல்லத்தில் வசித்து வந்தார்.
அவரது மறைவைத் தொடர்ந்து வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கைகள் வந்தன.
இதை ஏற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17-ந்தேதி ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையம் நினைவு இல்லமாக மாற்றி பொது மக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்படும் என்று அறிவித்தார்.
இதற்காக வேதா நிலையம் இல்லத்தை விலைக்கு வாங்கி கையகப்படுத்தவும், நினைவு இல்லமாக மாற்றுவதற்கும் தமிழக அரசு ரூ.20 கோடி ஒதுக்கியது. 2018-19-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டிலும் நிதி ஒதுக்கீடு செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டது.
வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.
இதே போல் ஜெயலலிதா அண்ணன் மகள் தீபாவும் வேதா நிலையத்தில் தனக்கு உரிமை இருப்பதாகவும் தன்னை கேட்காமல் வேதா நிலையத்தை அரசு கையகப்படுத்தக்கூடாது என்றும் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இதனால் ஜெயலலிதா வீட்டை நினைவு இல்லமாக மாற்றுவதில் தாமதம் ஏற்பட்டது.
மேலும் போயஸ் கார்டன் குடியிருப்பு வாசிகளும் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் கருத்து கேட்பு கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. தனியார் அமைப்பான சென்னை சமூக பணி கல்லூரியிடம் அந்த பணி ஒப்படைக்கப்பட்டது.
அந்த அமைப்பைச் சேர்ந்த ஈனாக் தலைமையிலான குழுவினர் தேனாம்பேட்டை சமூக நல கூடத்தில் இன்று கருத்து கேட்பு கூட்டம் நடத்தினார்கள். இதில் போயஸ் கார்டனைச் சுற்றிலும் 5 கி.மீ. பரப்பளவில் வசிக்கும் மயிலாப்பூர், மந்தைவெளி, ஆழ்வார் பேட்டை, கோபாலபுரத்தைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
இது தொடர்பாக ராமகிருஷ்ணன், பாலசுப்பிரமணியம், கார்த்திகா, அருணாசலம் உள்பட 108 பேர் தங்கள் கருத்துக்களை எழுத்து மூலமாக சமர்ப்பித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
மறைந்த ஜெயலலிதா எங்கள் பகுதியில் வசித்தது எங்களுக்கு பெருமையாக இருந்தது. அவர் வசித்த போது பெரிய தலைவர்கள் பலர் இங்கு வந்து சென்றனர். அப்போது இந்தப்பகுதியில் வசிப்பவர்களுக்கு எந்த ஒரு இடையூறும் ஏற்படாமல் பார்த்துக் கொண்டார். இதனால் எங்களுக்கு பிரச்சினை இல்லை.
தற்போது நினைவு இல்லமாக மாற்றினால் அதற்கான போக்குவரத்து வசதிகளோ, வாகன நிறுத்தும் இடங்களோ அங்கு இல்லை. எல்லாமே சிறிய சந்துகளாகவும், சிறிய சாலைகளாகவும் உள்ளது. ஏராளமானவர்கள் வரும் போது வாகனம் நிறுத்த இடம் இல்லாமல் சிரமம் ஏற்படும். போக்குவரத்து நெரிசல் உருவாகும். திடீர் கடைகள் உருவாகவும் வாய்ப்பு உள்ளது.
டெல்லி போன்ற இடங்களில் தலைவர்களின் நினைவு இல்லங்கள் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் பொது இடத்தில் அமைந்துள்ளன. அதுபோல் ஜெயலலிதா நினைவு இல்லத்தை பொது இடத்தில் அமைக்கலாம்.
ஜெயலலிதா மீது எங்களுக்கு தனிப்பட்ட முறையில் மரியாதையும், பெருமையும் இருந்தாலும், போயஸ் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றும் போது எங்களின் தனிப்பட்ட சுதந்திரமும், இந்தப் பகுதியின் அமைதியும் பாதிக்கப்படும்.
இவ்வாறு தெரிவித்தனர்.
அதே சமயம் இந்தப் பகுதி முன்னாள் கவுன்சிலர் சிவராஜ், பிரிதிவிராஜன் உள்ளிட்டோர் நினைவு இல்லமாக மாற்ற ஆதரவு தெரிவித்தனர். தலைவர்கள் வாழ்ந்த இடத்தை நினைவு இல்லமாக மாற்றுவதுதான் சரி.
அதை இப்பகுதி மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். இதனால் ஏற்படும் இடையூறுகளை தவிர்க்க வழி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்றனர்.
மீண்டும் கருத்து கேட்பு கூட்டம் நாளை மறுநாள் (10-ந்தேதி) வேறொரு பகுதியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
கருத்து கேட்பு கூட்டம் முடிந்ததும் இதுபற்றிய அறிக்கை மாவட்ட நிர்வாகம் மூலம் தமிழக அரசிடம் தாக்கல் செய்யப்படும். அதன் பிறகு தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும். #Jayalalitha #JayalalithaHouse #PoesGarden #TNGovernment

அதன்படி மொத்தம் 120 குடியிருப்புகளைச் சேர்ந்தவர்கள் கருத்து கேட்பு கூட்டத்தில் கலந்து கொண்டனர். அவர்களில் 108 குடியிருப்பு வாசிகள் ஜெயலலிதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்தனர்.
இது தொடர்பாக ராமகிருஷ்ணன், பாலசுப்பிரமணியம், கார்த்திகா, அருணாசலம் உள்பட 108 பேர் தங்கள் கருத்துக்களை எழுத்து மூலமாக சமர்ப்பித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
மறைந்த ஜெயலலிதா எங்கள் பகுதியில் வசித்தது எங்களுக்கு பெருமையாக இருந்தது. அவர் வசித்த போது பெரிய தலைவர்கள் பலர் இங்கு வந்து சென்றனர். அப்போது இந்தப்பகுதியில் வசிப்பவர்களுக்கு எந்த ஒரு இடையூறும் ஏற்படாமல் பார்த்துக் கொண்டார். இதனால் எங்களுக்கு பிரச்சினை இல்லை.
தற்போது நினைவு இல்லமாக மாற்றினால் அதற்கான போக்குவரத்து வசதிகளோ, வாகன நிறுத்தும் இடங்களோ அங்கு இல்லை. எல்லாமே சிறிய சந்துகளாகவும், சிறிய சாலைகளாகவும் உள்ளது. ஏராளமானவர்கள் வரும் போது வாகனம் நிறுத்த இடம் இல்லாமல் சிரமம் ஏற்படும். போக்குவரத்து நெரிசல் உருவாகும். திடீர் கடைகள் உருவாகவும் வாய்ப்பு உள்ளது.
டெல்லி போன்ற இடங்களில் தலைவர்களின் நினைவு இல்லங்கள் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் பொது இடத்தில் அமைந்துள்ளன. அதுபோல் ஜெயலலிதா நினைவு இல்லத்தை பொது இடத்தில் அமைக்கலாம்.
ஜெயலலிதா மீது எங்களுக்கு தனிப்பட்ட முறையில் மரியாதையும், பெருமையும் இருந்தாலும், போயஸ் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றும் போது எங்களின் தனிப்பட்ட சுதந்திரமும், இந்தப் பகுதியின் அமைதியும் பாதிக்கப்படும்.
இவ்வாறு தெரிவித்தனர்.
அதே சமயம் இந்தப் பகுதி முன்னாள் கவுன்சிலர் சிவராஜ், பிரிதிவிராஜன் உள்ளிட்டோர் நினைவு இல்லமாக மாற்ற ஆதரவு தெரிவித்தனர். தலைவர்கள் வாழ்ந்த இடத்தை நினைவு இல்லமாக மாற்றுவதுதான் சரி.
அதை இப்பகுதி மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். இதனால் ஏற்படும் இடையூறுகளை தவிர்க்க வழி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்றனர்.
மீண்டும் கருத்து கேட்பு கூட்டம் நாளை மறுநாள் (10-ந்தேதி) வேறொரு பகுதியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
கருத்து கேட்பு கூட்டம் முடிந்ததும் இதுபற்றிய அறிக்கை மாவட்ட நிர்வாகம் மூலம் தமிழக அரசிடம் தாக்கல் செய்யப்படும். அதன் பிறகு தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும். #Jayalalitha #JayalalithaHouse #PoesGarden #TNGovernment
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை பற்றிய வெளிவராத பல்வேறு தகவல்கள் தந்தி டிவி நிகழ்ச்சியின் மூலம் வெளியாகி வருகின்றன. #Jayalalithaa #ThanthiTV
சென்னை:
‘ஜெ.ஜெயலலிதா எனும் நான்’ என்ற பெயரில் தந்தி டி.வி.யில் நேற்று முதல் புதிய நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
இதில் ஜெயலலிதா பற்றி இதுவரையில் யாரும் அறிந்திராத அரிய தகவல்கள் இடம் பெற்றுள்ளது. தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி பொது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. தொடர்ந்து 5 நாட்கள் வருகிற வெள்ளிக்கிழமை வரை தந்தி டி.வி.யில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுகிறது.
முதல் நாளான நேற்றே ‘ஜெ.ஜெயலலிதா எனும் நான்’ நிகழ்ச்சியில் ஜெயலலிதா பற்றிய பல்வேறு தகவல்கள் வெளியானது. இதுவரையில் யாரும் சொல்லாத தகவல்களாக அது இருந்தது.
2014-ம் ஆண்டு ஜெயலலிதா கைது செய்யப்பட்டது தொடர்பாகவும், அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது குறித்தும் பல்வேறு தகவல்கள் வெளி வந்துள்ளன. 2016-ம் ஆண்டு செப். 22-ந்தேதி ஜெயலலிதா அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது ஆம்புலன்சில் நடந்தது என்ன? என்பது பற்றி அவரது குடும்ப டாக்டர் சிவக்குமார் விவரித்துள்ள பல்வேறு விஷயங்களும் உருக்கமாக உள்ளன.
கொடநாடு எஸ்டேட் ஜெயலலிதாவுக்கு பிடித்தமான இடங்களுள் ஒன்றாகும். அங்கு சென்று ஓய்வு எடுப்பதை அவர் வழக்கமாகவே வைத்திருந்தார். அந்த எஸ்டேட் தொடர்பாக சுவாரஸ்யமான தகவல்களும் நேற்றைய நிகழ்ச்சியில் இடம் பெற்றிருந்தன.
2-வது நாளாக இன்று இரவு 9 மணிக்கு ஜெ.ஜெயலலிதா எனும் நான் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. ஜெயலலிதாவின் தினசரி வாழ்வில் என்னென்ன சம்பவங்கள் நடந்தன என்பது ருசிகர தகவல்களாக தொகுக்கப்பட்டுள்ளது. போயஸ் தோட்டம் இல்லத்தில், பல்வேறு அரசியல் முடிவுகளை எடுத்து வெற்றி பெற்றவர் ஜெயலலிதா. இது மட்டுமே பலருக்கு தெரியும்.
ஆனால் ஜெயலலிதா தனது இல்லத்தில் பண்டிகைகளையும் மகிழ்ச்சி பொங்க கொண்டாடி உள்ளார். நவராத்திரி, தீபாவளி போன்ற பண்டிகைகளை அவர் சந்தோஷத்தோடு கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.
ஜெயலலிதாவின் மகிழ்ச்சியான அந்த தருணங்களை கண்முன்னே நிறுத்தும் வகையில், இன்றைய நிகழ்ச்சியில் இனிமையான நிகழ்வுகள் நினைவு அலைகளாக விரிகின்றன.
ஜெயலலிதாவை பொறுத்தவரையில் மிகவும் தைரியமான பெண் ஒன்று பெயரெடுத்தவர். எதற்கும் பயப்படமாட்டார் என்பதை உணர்த்தும் வகையில் போயஸ் தோட்டத்து இல்லத்தில் சம்பவம் ஒன்றும் நடந்துள்ளது.
ஒருமுறை ஜெயலலிதாவின் வீட்டுக்குள் பாம்பு ஒன்று புகுந்து விட்டது. இதனை பார்த்து பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் கூட பயந்து நடுங்கி உள்ளனர். ஆனால் ஜெயலலிதாவோ அந்த பாம்பை கண்டு கொஞ்சமும் பயப்படாமல் இருந்துள்ளார். அந்த சம்பவமும் இன்றைய நிகழ்ச்சியில் சேர்க்கப்பட்டுள்ளது.
செல்லப்பிராணிகள் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தவர் ஜெயலலிதா. குரங்குகள், நாய்க்குட்டிகள் மீது அளவு கடந்த பாசம் கொண்டிருந்துள்ளார்.
வீட்டில் செல்லமாக வளர்த்த நாய்க்குட்டி திடீரென இறந்து போனதால் தனது டெல்லி நிகழ்ச்சியையே ரத்து செய்துள்ளார் ஜெயலலிதா. இதுபற்றிய தகவல்களும் நிகழ்ச்சியில் பாசமழையாக பொழிய உள்ளது.
அப்பல்லோவில் சிகிச்சை பெற்ற போது ஜெயலலிதா முதன்முதலில் பேசிய வார்த்தை என்ன? என்பது அனைவரது மனதிலும் இப்போது வரையில் மிகப்பெரிய கேள்வியாகவே உள்ளது. இதற்கும் இன்றைய நிகழ்ச்சி விடை தருகிறது.
கடவுள் நம்பிக்கை அதிகம் கொண்டவரான ஜெயலலிதா ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்படி தரிசனம் செய்த போது ஒரு முறை சன்னதியில் கதறி அழுதுள்ளார்.
சந்தோஷமான தருணம் ஒன்றில் கருணாநிதி குரலிலும் ஜெயலலிதா மிமிக்ரி செய்து பேசிக் காட்டியுள்ளார். இதன் மூலம் அவரது மிமிக்ரி ஆற்றலும் வெளிப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியுடன் நட்பு பாராட்டியவர் ஜெயலலிதா. மோடிக்கு அவர் அளித்த விருந்தின் போது சுவாரஸ்யமான சம்பவங்களும் அரங்கேறியுள்ளன.
இனிப்பு வகைகள் மீது ஜெயலலிதாவுக்கு எப்போதுமே ஈர்ப்பு அதிகம். இரவில் குறிப்பிட்ட இனிப்பு ஒன்றை அவர் விரும்பி கேட்டு சாப்பிடுவதை வழக்கமாகவே வைத்திருந்துள்ளார். அது என்ன இனிப்பு? ஜெயலலிதாவின் விருப்ப உணவுகள் என்ன? என்பது போன்ற தகவல்களும் இன்றைய நிகழ்ச்சியில் ஆச்சரியமூட்டும் வகையில் இடம் பெற்றுள்ளது.
தந்தி டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சி மூலம் ஜெயலலிதாவின் வாழ்வில் யாரும் அறிந்திராத இன்னொரு பக்கத்தை பார்க்க முடிகிறது என்றால் அது மிகையல்ல.
இதே போல நாளை ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியிலும், அதன் பின்னர் 6, 7-ந்தேதிகளில் வர இருக்கும் நிகழ்ச்சிகளிலும் ஜெயலலிதா தொடர்பான பல்வேறு தகவல்கள் வெளியாக உள்ளன.
இந்த நிகழ்ச்சியின் மறுஒளிபரப்பு மறுநாள் மாலை 5 மணிக்கு ஒளிப்பரப்பாகிறது. #Jayalalithaa

ஜெயலலிதாவின் சித்தி அமீதா மகள் தெரிவித்த தகவல்கள் உருக்கமாக இருந்தன. ஜெயலலிதாவின் மாமா மகளும் நிகழ்ச்சி வாயிலாக பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார். ஜெயலலிதா அனாதை போல கிடந்ததாக அவர் குறிப்பிட்டிருந்தார். போயஸ் கார்டனில் பணியாற்றிய ராஜம்மா, இனி எனக்கு யார் இருக்கா? என்று கூறியது கண்ணீரை வரவழைப்பதாக இருந்தது.
ராஜம்மா

×

X